Friday, January 04, 2008

407. கோயில் உண்டியலில் காசு போடுங்கள் !

கண்ணபிரான்,
உங்களின் இந்தப் பதிவு குறித்து எனது சில கருத்துகள்:

முதலில், பரபரப்பான தலைப்புக்கு பாராட்டுக்கள், தேறி விட்டீர்கள் :)

1. //திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
//

உண்டியலில் காசு போடாதே என்று சொல்வது சரியாகாது. இருக்கிறவங்க போடட்டுமே, அதில் ஒரு பங்காவது கோயில் நற்பணிகளுக்கும், பக்தர்களுக்கும் திரும்பித் தான் வருகிறது என்பது உண்மையே! தட்டில் காசு போட வேண்டாம் என்று கூறுவதும் தவறே, ஏனெனில் பல அர்ச்சகர்கள் கஷ்ட ஜீவனம் தான் நடத்துகிறார்கள், சிலபல பெருமை வாய்ந்த கோயில்கள் தவிர்த்து !

2. அது போல, செல்வனின் பின்னூட்டக் கருத்தான அரசு நிர்வாகத்தால் தான் கோயில்களில் பிரச்சினை என்பதும் ஏற்புடையதல்ல. ஆனால், செல்வனின் பிற கருத்துகள் 'நச்' ! எனக்குத் தெரிஞ்சு, பார்த்தசாரதி கோவிலில் 'அலம்பல்' பண்றவங்க, பரம்பரையா பாத்யதை உள்ளவங்களும், கோஷ்டியில வர்றவங்களும், மடப்பள்ளி ஆட்களும் தான் !!! எல்லா விசேஷ தினங்களிலும், அவங்க ஆதிக்கம் தான் :( யாராவது விஐபி வந்தா, கோயில் ஆட்கள், அவங்க மேலே விழுந்து கவனிக்கறதும் நாம் பார்க்கிறது தானே !

ஒரு முறை RM வீரப்பன் பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தபோது, 20-25 பேர் தரிசனம் செய்யக்கூடிய அழகிய சிங்கர் சன்னதியில், பொது மக்கள் யாரையும் உள்ளே விடாமல் கோயில் அலுவலர்கள், அவரை மட்டும் தனியாக தரிசனம் செய்ய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன், அவர் அதை விரும்பாதபோதும் ! அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும், சாமியார்களையும் எப்படியாவது குஷிப்படுத்த வேண்டும் என்ற அதீத ஆர்வக் கோளாறு நம்மிடம் விரவியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் :(

3. செல்வனின் இன்னொரு கருத்தான "ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து" என்பதில் சாரம் இருப்பதாகத் தோன்றவில்லை. இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன். இறை நம்பிக்கைக்கும், மனித நேயத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை !!!

4. எல்லா இடத்துலேயேயும், 'வகுப்புகள்' இருக்கிற மாதிரி, கோயில் தரிசன முறையிலும் இருக்கு, அதை 'avoid' பண்ண முடியாது, மாத்தறதும் ரொம்ப கஷ்டம். ஸ்பெஷல் டிக்கட் விலையை நல்லா உயர்த்தி வச்சு, இருக்கிறவங்க கிட்டேயிருந்து வாங்கறது ஒரு தப்புமில்ல, அரசியல் விஐபிகள் தான், ஒரு பைசா செலவில்லாம, அதிகாரத்த வச்சு, பண்ண பாவத்துக்கு ஓசியிலேயே கோயிலில் பரிகாரம் தேடறவங்க என்பதும் நிதர்சனமே !!! தொழிலதிபர் விஐபிக்கள் வாயிலாக கோயிலுக்கு பொருள் ஆதாயம் உள்ளதால், அவர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் அனுமதிக்கப்படுவதில் தவறில்லை.

5. //கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை எனில், அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
//

இதெல்லாம், கேட்கறதுக்கு வேணா நல்லா இருக்கும், கடைபிடிக்கறது ரொம்ப கஷ்டம் ! "எங்கும் இறைவனைக் காண்பதற்கு" நாமெல்லாம் ஆழ்வார்/நாயன்மாரா என்ன ???

6. //* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
//

ஆழ்வார்/ நாயன்மாரிடம் காசு இருக்கவில்லை என்பது தான் நிஜம் ! அது போலவே, பெரும்பாலான மக்கள் காசு போடுவதால், பாப விமோசனம் கிட்டாது என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பது என் தாழ்மையான எண்ணம். சாதாரண மக்கள், மன அமைதிக்காகவும், ரொம்பவும் கஷ்டமில்லாத ஜீவனத்தை வேண்டியுமே, இறைவன் இல்லத்திற்குச் செல்கிறார்கள்.

7. //முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்!
//

புதுசா ஆலயங்கள் வேண்டாம்னு நீங்க சொல்ற கருத்தோட எனக்கு உடன்பாடே, இருக்கிற கோயிலகளில் பல பராமரிப்பு அற்று, சிதிலமான நிலையில், நித்ய ஆராதனைக்குக் கூட காசு இல்லாமல் உள்ளன என்பது கண்கூடு. எனக்குத் தெரிஞ்சு, ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன. அவைகளில் சில:
திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில்
திருக்கூடலூர்
திருக்கபிஸ்தலம்
திருஆதனூர்
புல்லம்பூதங்குடி
நாதன் கோயில்
திருக்கண்டியூர்'
திருக்கண்ணங்குடி
தலைச்சங்காடு, கேரளா
திருநாங்கூர் கோயில்கள் (11)
திருக்குரயலூர் (திருமங்கையாழ்வார் அவதாரத் தலம்)
திருவாலி & திருநகரி

அது போலவே, கோயிலுக்குப் போடும் பணத்தை, தர்ம காரியங்களுக்கு செலவிடலாம். இறைத் தொண்டை விட அடியவர் தொண்டு சிறந்தது அல்லவா ?

8. உங்கள் தமிழ் அர்ச்சனை குறித்த கருத்து பற்றி ஏதாவது சொன்னால் அரசியலாகி விடும் ;-) இறைவனுக்கு மொழி கிடையாது. அவரவர்க்கு எது விருப்பமோ, அதன்படி அவனைப் போற்றி வழிபடலாம், அம்புடுதேன் :)

9. தங்களது இன்னபிற நல்ல கருத்துக்களோடு முழுதும் உடன்படுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

41 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதலில், பரபரப்பான தலைப்புக்கு பாராட்டுக்கள், தேறி விட்டீர்கள் :)//

அடியேனும் தங்களை அவ்வண்ணமே பாராட்டுகிறேன் பாலா!
பரபரப்பான தலைப்புக்கு
எதிர் பரபரப்பான தலைப்புக்குப் பாராட்டுக்கள்! :-)))
ச்ச்சும்மா...

உங்கள் ஒவ்வொரு கருத்துக்கும் விரிவான பதிலும் பார்வையும் இன்னும் சற்று நேரத்தில் முன் வைக்கிறேன்!

என் பதிவின் தொடர்ச்சியான, நிர்வாகத் தரப்பில் ஆலயத் திருத்தங்கள் இன்னும் வெளி வரவில்லை! திங்களன்று இடுகிறேன்! அதையும் முழுக்கப் படித்து, உங்கள் ஆலோசனைகளைச் சொல்லவும்!

துளசி கோபால் said...

//ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன//

அடடா.........

இந்த ஆலயங்களில் வழிபாடு செய்தால் உடனே (கல்யாணம், குழந்தை, பதவி, செல்வம் இப்படி எதாவது ஒன்னு) நினைச்சது நடக்குமுன்னு செய்தி பரப்புனாப் போதும்.

நம்ம மக்கள்ஸ் கூடிறமாட்டாங்களா?

எதாவது சாமியாரோ அல்லது ஜோசியரோ டிவியில் வந்து சொன்னாப்போதுமே.

துளசி கோபால் said...

//ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன//

அடடா.........

இந்த ஆலயங்களில் வழிபாடு செய்தால் உடனே (கல்யாணம், குழந்தை, பதவி, செல்வம் இப்படி எதாவது ஒன்னு) நினைச்சது நடக்குமுன்னு செய்தி பரப்புனாப் போதும்.

நம்ம மக்கள்ஸ் கூடிறமாட்டாங்களா?

எதாவது சாமியாரோ அல்லது ஜோசியரோ டிவியில் வந்து சொன்னாப்போதுமே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இருக்கிறவங்க போடட்டுமே, அதில் ஒரு பங்காவது கோயில் நற்பணிகளுக்கும், பக்தர்களுக்கும் திரும்பித் தான் வருகிறது என்பது உண்மையே!//

அடியேன் கோவில் நற்பணிகள் எல்லாம் வேண்டாம்-னு சொல்லலையே! அரசுக்கும் நிர்வாகத்துக்கு எங்கு முதலில் கை வைத்தால், ஆட்டம் காணுமோ, அங்கு கை வைக்கச் சொன்னேன்!

உண்டியலில் வரும் பணம் constant source என்று நினைத்துக் கொண்டு, என்ன செய்தாலும் கேட்பாரில்லை என்ற போக்கு ஒழிய வேண்டும்.

அத்தனை பக்தர்கள் சேர்ந்து கொட்டும் பணத்தின் அளவு என்ன? அம்பானி கொடுக்கும் பணத்தின் அளவு என்ன?
அப்படிப் பார்த்தா, பக்தர்களுக்கு அல்லவா அம்பானியை விட முன்னுரிமை தர வேண்டும்?

இது போன்ற புறக்கணிப்புக்கள் (பகிஷ்கரிப்பு) தான் சரியான அடியாக இருக்கும்! ஆனால் கோவில் நற்பணிகளுக்கும், மராமத்து வேலைகள், குடமுழுக்கு இதுக்கெல்லாம் தான் காசோலைத் திட்டம் சொல்லி இருந்தேனே!

//தட்டில் காசு போட வேண்டாம் என்று கூறுவதும் தவறே//

தட்டில் போட வேண்டாம் என்று அடியேன் பதிவில் சொல்லவில்லை!
அதுவும் வறிய ஆலயங்களில் உள்ள அர்ச்சகர்/பூசாரிகளின் நிலையை நான் அறிவேன். அங்கெல்லாம் இருப்பதே ஒரு அர்ச்சகர் தான்! அங்கு பூசைப் பொருட்கள் எல்லாம் அவரே நமக்காக வாங்கி வைத்து, சேவித்து வைக்கும் பழக்கம் கூட உள்ளது! அங்கு கொடுங்க!

ஆனால் நகர்ப்புறக் கோவில்களில் எல்லாம், அது நடைபாதைக் கோவிலாக இருந்தாலும், தள்ளாட்டங்கள் மிகுதி! இங்கெல்லாம் அர்ச்சகர்களுக்கு code of conduct வர வேண்டும்! அடுத்த பதிவில் சொல்கிறேன்!

//அது போல, செல்வனின் பின்னூட்டக் கருத்தான அரசு நிர்வாகத்தால் தான் கோயில்களில் பிரச்சினை என்பதும் ஏற்புடையதல்ல.//

இந்த விஷயத்தில் மட்டும் செல்வனின் கருத்து எனக்கு ஏற்புடையதே! அரசு நிர்வாகத்தின் ஆலயக் குறிக்கோள் என்ன? இறைப்பணி செய்வதா? அப்படி ஏதாச்சும் இருக்கா? குறிக்கோள் இலாது கெட்டேன்-னு பதிகம் வரும்! அதே தான் அரசு நிர்வாகம்!

மந்திரிகள் வந்தால் மேல் விழுந்து ஆடுவது எல்லாம் சின்ன விஷயம் தான். சரியான நடைமுறைகள் வகுத்து விட்டால் இதெல்லாம் குறைந்து விடும்! வாடிகன் சென்றால் அம்பானிக்கும், அமைச்சருக்கும் பட்டமா கட்டுகிறார்கள்? வரிசையில் நிக்கலை? Heads of Stateக்கு மட்டும் தானே சிறப்பு! அங்கு நிற்கும் அமைச்சர், இங்கும் நிற்கலாம்! முடியும்!

//ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து//

மனித நேயம் மதத்துக்கு அப்பாற்பட்டது! - மிகவும் உண்மை!
செல்வன் என்ன சொன்னாருன்னா, ஆன்மீக அன்பர்கள் கடவுள் கடவுள்ன்னு மட்டும் பேசிக் கொண்டிராமல், உதவிக்கும் முன்னணியில் வருகிறார்கள் என்ற பொருளில் சொல்ல வந்தார் என்று தான் நினைக்கிறேன். ஆன்மீக சாராதார் உதவ மாட்டார்கள்-ன்னு சொல்லலை!

//எல்லா இடத்துலேயேயும், 'வகுப்புகள்' இருக்கிற மாதிரி, கோயில் தரிசன முறையிலும் இருக்கு, அதை 'avoid' பண்ண முடியாது//

அதான் ஏன் முடியாது என்று கேட்கிறேன்!
அப்படி என்ன ஒரு பக்தனின் நேரம் உசத்தி! இன்னொரு பக்தனின் நேரம் தாழ்த்தி! இறைவன் பத்துடை அடியவர்க்கு எளியன், பிரம்மாதி தேவர்க்கு அரியன் என்ற கோட்பாடே அடிபட்டுப் போகிறதே!

தவறாக முளைத்து விட்ட ஒரு பழக்கத்தை விட முடியாமல் எதுக்கு institutionalize செய்யப் பார்க்கிறோம்?
அப்படின்னா ஆலயத்தின் கோட்பாட்டை அடகு வைத்து விடலாமா? நடைமுறைக்கு ஏற்றாற் போல் வண்டி ஓட்டி விடலாமா?

//கோயிலுக்கு பொருள் ஆதாயம் உள்ளதால், அவர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் அனுமதிக்கப்படுவதில் தவறில்லை//

இங்கே யார் முக்கியம்? எது முக்கியம்?
ஆலயத்தின் முதல் நோக்கம் என்ன?
இதுக்கு விடை தேடுங்கள்! தெளிவு பிறக்கும்!
முதல் நோக்கம்: ஆன்மீக வளர்ச்சியா? இல்லை கோவில் வருமானத்தை அதிகப்படுத்தி இன்னும் வசதி செய்து கொடுப்பதா? எது குறிக்கோள்???

//"எங்கும் இறைவனைக் காண்பதற்கு" நாமெல்லாம் ஆழ்வார்/நாயன்மாரா என்ன ???//

எங்கும் இறைவனைக் காணச் சொல்லவில்லை! கோயிலில் தான் காணச் சொன்னேன்! கோயிலுக்குப் போங்க! ஆனால் அங்க போயி நான் பிசி, இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்குத் தரிசனம் கிடைச்சாகணும்! அதுக்கு என்ன shortcutன்னு யோசிக்காதீங்க! இது தான் சொன்னேன்! இல்லை நான் அப்படித் தான் யோசிப்பேன் என்பவர்களைத் தான் அதுக்கு ஆலயத்துக்கே போக வேணாம்-னு சொன்னேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எனக்குத் தெரிஞ்சு, ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன.//

நன்றி பாலா!
அதுக்குத் தான் அந்த வலைப்பூ முகவரியைக் கொடுத்தேன்.
temple revivals blogspotஇல் இதைக் குறிப்பிடுங்கள். நானும் எடுத்துச் சொல்கிறேன்!
அவர்கள் ஒவ்வொன்றாக எடுக்கத் தலைப்படுவார்கள்.

கவன ஈர்ப்பு தான் முக்கியம்!
அதுக்கு அப்புறம் பணிகள் ஊர் கூடித் தேர் இழுத்தல் தான்!

//இறைவனுக்கு மொழி கிடையாது. அவரவர்க்கு எது விருப்பமோ, அதன்படி அவனைப் போற்றி வழிபடலாம், அம்புடுதேன் :)//

மிகவும் சரி!
கடவுள் கடந்து உள்ளவன்! மொழியையும் சேர்த்து தான் கடந்தவன்!
அவரவர்க்கு உண்டான விருப்பத்தை யார் தீர்மானிப்பது?
பெயர், நட்சத்திரம் கேட்பது போல், எந்த மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கட்டுமே!

அவரவர் விருப்பம் என்ன என்பதை அறிந்து செய்யட்டுமே! செய்வார்களா?
பாலா,
வடமொழி அர்ச்சனைக்கு அடியேன் எதிரி அல்ல! அப்படி இருந்தால் ஏன் சுப்ரபாதப் பதிவுகள் போடுகிறேன்?
நான் புருஷ சூக்தத்தையோ, ஸ்ரீ ருத்ரத்தையோ வீம்புக்குத் தமிழாக்கிப் பாடச் சொல்லலை!

அர்ச்சனை என்பது பெயர்ச் சொல்லும் குணச் சொல்லும் சேர்ந்த போற்றி!
சங்கல்பம் செய்து வைக்கும் போது, தான் என்ன சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்-னு அர்ச்சனை செய்பவனுக்குத் தெரிய வேண்டாமா?
Missisippi-Missouri நதி தீரே-ன்னு எல்லாம் சொல்ல முடியுதில்ல! பெயர்ச்சொல் தானே! அதே போல் தமிழ் அர்ச்சனையும் கருதுங்க-ன்னு தான் சொன்னேன்!

//தங்களது இன்னபிற நல்ல கருத்துக்களோடு முழுதும் உடன்படுகிறேன்//

மிக மிக நன்றி!
தனியாக ஒரு விளக்கப் பதிவு போட்டு, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை மக்கள்ஸ் அனைவரும் உணர உங்கள் பங்களிப்பைச் செய்து இருக்கீங்க! வாழ்த்துக்கள்! நன்றிகள்!

யோசிச்சி முடிவுக்கு வாங்க மக்கா!
1. ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
இல்லை பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கொடுக்கலாமேன்னு, ஒரு "நல்ல எண்ணத்துல" செல்வந்தர்களிடம் பொருள் ஆதாயம் திரட்ட ஏற்பட்டவையா?

முதல் நோக்கம்: ஆன்மீக வளர்ச்சியா? இல்லை கோவில் வருமானத்தை அதிகப்படுத்தி இன்னும் வசதி செய்து கொடுப்பதா? எது குறிக்கோள்??? யோசியுங்க! யோசியுங்க!!

Unknown said...

Good post bala.I will reply in detail tomorrow

enRenRum-anbudan.BALA said...

துளசி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்மூர்ல சாமியார் என்ன சொன்னாலும் கேப்பாங்க தானே :)

கண்ணபிரான்,
விரிவான விளக்கத்திற்கு நன்றி.
//அடியேன் கோவில் நற்பணிகள் எல்லாம் வேண்டாம்-னு சொல்லலையே! அரசுக்கும் நிர்வாகத்துக்கு எங்கு முதலில் கை வைத்தால், ஆட்டம் காணுமோ, அங்கு கை வைக்கச் சொன்னேன்!

உண்டியலில் வரும் பணம் constant source என்று நினைத்துக் கொண்டு, என்ன செய்தாலும் கேட்பாரில்லை என்ற போக்கு ஒழிய வேண்டும்.
//
முதற்கண், அரசையும், நிர்வாகத்தையும் ஆட்டம் காண வைப்பதால், என்ன நிகழும் என்பதை நீங்கள் சற்று தெளிவாகச் சொன்னால் பரவாயில்லை ! உண்டியல் பணத்தில் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா என்ன ??? செல்வன் கூறுவது போல அம்பானியும் ஐஸ்வர்யா ராயும் க்யூவில் நின்று தரிசனம் செய்ய முடியும் என்று கூறுவது சற்று அதிகபட்சம் என்பது தான் என் எண்ணம், இப்போதும் !!! விஐபி கட்டணம் என்று அதிகம் வசூலித்து அதை நற்காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்று லாஜிக்கலாக ஒரு தீர்வை முன் வைத்தேன் !

//இந்த விஷயத்தில் மட்டும் செல்வனின் கருத்து எனக்கு ஏற்புடையதே! அரசு நிர்வாகத்தின் ஆலயக் குறிக்கோள் என்ன? இறைப்பணி செய்வதா? அப்படி ஏதாச்சும் இருக்கா? குறிக்கோள் இலாது கெட்டேன்-னு பதிகம் வரும்! அதே தான் அரசு நிர்வாகம்!
//
இந்த 'இறைப்பணி' என்பதை விளக்குவது சற்று சிக்கலான மேட்டர் :) அரசாக இருந்தாலும், தனியார் நிர்வாகமாக இருந்தாலும் இங்கே இறைப்பணி என்ற குறிக்கோள் வெகு சில இடங்களில் தான் உள்ளது என்பது தான் யதார்த்தம் !

//அதான் ஏன் முடியாது என்று கேட்கிறேன்!
அப்படி என்ன ஒரு பக்தனின் நேரம் உசத்தி! இன்னொரு பக்தனின் நேரம் தாழ்த்தி! இறைவன் பத்துடை அடியவர்க்கு எளியன், பிரம்மாதி தேவர்க்கு அரியன் என்ற கோட்பாடே அடிபட்டுப் போகிறதே!

தவறாக முளைத்து விட்ட ஒரு பழக்கத்தை விட முடியாமல் எதுக்கு institutionalize செய்யப் பார்க்கிறோம்?
அப்படின்னா ஆலயத்தின் கோட்பாட்டை அடகு வைத்து விடலாமா? நடைமுறைக்கு ஏற்றாற் போல் வண்டி ஓட்டி விடலாமா?
//
utopian விவாதம் செய்தால் பதில் கூற இயலாது :) சிலரின் நேரம், சிலரின் நேரத்தை விட முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது, இந்த விஷயத்தில் இறைவன் சம்பந்தப்பட்டிருந்தாலும் ! சிலர் கொஞ்சம் அதிக பிஸி என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே ! காத்திருக்கும் பிற பக்தர்களை வெறுப்பேற்றா வண்ணம், விஐபிக்களை கவனித்துக் கொண்டால் நல்லது, அம்புடு தேன் :)

One has to change according to changing times ! மேலும், 'வணிகம்' என்பது கோவிலுக்கும் இப்போது பொருந்தும் !

//ஆலயத்தின் முதல் நோக்கம் என்ன?
இதுக்கு விடை தேடுங்கள்! தெளிவு பிறக்கும்!
முதல் நோக்கம்: ஆன்மீக வளர்ச்சியா? இல்லை கோவில் வருமானத்தை அதிகப்படுத்தி இன்னும் வசதி செய்து கொடுப்பதா? எது குறிக்கோள்???
//
முதல் நோக்கம், மன அமைதியும் சந்த்ருஷ்டியும் !! ஆன்மிக வளர்ச்சி என்பது அடுத்த கட்டம், அதுவும் தேவை, பக்தர்களுக்கு சௌகரியமும் தேவையாகத் தான் உள்ளது. பெருகும் பக்தர்கள் கூட்டத்துக்கு வசதி செய்ய டப்பும் தேவை தானே :)

//ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
இல்லை பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கொடுக்கலாமேன்னு, ஒரு "நல்ல எண்ணத்துல" செல்வந்தர்களிடம் பொருள் ஆதாயம் திரட்ட ஏற்பட்டவையா?
//
இவ்வளவு சொல்லிட்டு, கடைசி கடைசியா, பக்தர்களுக்கு லட்டு (அல்வான்னு சொல்லாம விட்டீங்களே:)) இலவசமா கொடுக்க பணக்காரங்க கிட்ட காசு வாங்கணும் என்பது தான் என் பதிவோட சாரம் என்கிற மாதிரி ஒரு தீர்ப்பு வழங்கறது உங்களுக்கே நியாயமாப் படுதா ???? ;-)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Thanks, Selvan !

Will wait for your response, bit scared though :)

மலைநாடான் said...

பாலா!

கும்பகோணத்திற்கு கிட்டவாக என்று நினைக்கின்றேன். "நவதிருப்பதி" எனும் ஒன்பது வைனவதிருத்தலங்களுக்குச் சென்றபோது, தமிழகத்து ஆலயங்களில் எங்குமிலாத தூய்மை, அமைதி, நேரம்கட்டுப்பாடு, தேவையற்ற பிச்சல் புடுங்கல் எதுவுமில்லாதிருக்கக் கண்டேன். ஆர்வமாய் விசாரித்த போது டிவிஎஸ் நிறுவனம் அந்தக் கோவில்களை தமது பொறுப்பில் எடுத்துப் பராமரிக்கின்றதாம். பணியாளர்கள் வசதியிலிருந்து, பக்தர்கள் வசதிவரை பார்த்துப் பார்த்துச் செய்திருக்கின்றார்கள். இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய நிறுவனங்களும், நடந்தால் அல்லது வருமானம் மிக்க ஆலயநிர்வாகங்களும் நடந்தால் அநேகமான சிரமங்கள் குறைந்து விடும் என்று நினைக்கின்றேன். நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

ஒரு முடிவுக்கு வாங்க ரெண்டு பேரும், அப்புறமா எதை ஏத்துக்கலாம்னு பாக்கறேன் :-)

enRenRum-anbudan.BALA said...

பெனாத்தலாரே,

வாங்க, வாங்க, என்ன ஆன்மீக மேட்டர் பக்கமெல்லாம நார்மலா வர மாட்டீங்களே :)
உங்க கருத்தையும் கூறுங்களேன் !!!

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

மலைநாடான்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

தாங்கள் கூறுவது போல், TVS நிறுவனம் தான் இந்த 9 கோயில்களுக்கும் பல நற்பணிகள்
செய்து பராமரித்தும் வருகின்றது. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட.
இன்ன பிற கார்ப்பரேட் நிறுவனங்களும், ஒன்றிரண்டு (பாரம்பரியம் மிக்க) வைணவ திவ்ய
தேசங்களை (மொத்தம் 106 திவ்ய தேசங்கள் உள்ளதை தாங்கள் அறிவீர்கள் என்று
நினைக்கிறேன்) தத்து எடுத்துக் கொண்டு, நற்பணிகளும், பராமரிப்பும் செய்ய முன் வர
வேண்டும்.

உங்கள் தகவலுக்கு சில உரல்கள்:

http://nammalwar.tripod.com/sitemap.html

http://www.divyadesamonline.com/

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
//என் பதிவின் தொடர்ச்சியான, நிர்வாகத் தரப்பில் ஆலயத் திருத்தங்கள் இன்னும் வெளி
வரவில்லை! திங்களன்று இடுகிறேன்! அதையும் முழுக்கப் படித்து, உங்கள்
ஆலோசனைகளைச் சொல்லவும்!
//
நிச்சயம் வாசிக்கிறேன், உங்களை விடறதா இல்ல :))))

எ.அ.பாலா

கோவி.கண்ணன் said...

//இறை நம்பிக்கைக்கும், மனித நேயத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை !!!//

சபாஷ்.

:)

சிவாஜி படத்தில் சுமனை( ஆதி)யை கூட குங்கும பொட்டு சகிதமாகத்தான் காட்டுகிறார்கள்.

கோவில் சிலையை திருடுபவர்கள் கூட இறை நம்பிக்கை அற்றவர்களாக இல்லை

Unknown said...

பாலா

அரசு நிர்வாகத்தை பற்றி முதலில் பேசவேண்டும்.மதசார்பற்ற அரசுக்கு கோயில் நிர்வாகத்தில் எந்த ஜோலியும் கிடையாது என்பது ஒருபுறம்.அரசு இயந்திரம் வழக்கமாக திறமையற்ற ஒன்று என்பது மறுபுறம்.ஐ.ஓ.சி, பெல் மாதிரி மோனொபோலிகளை தவிர்த்து அரசு கம்பனி எதுவும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.(விதி விலக்கு இருக்கலாம், ஆனால் விதி விலக்கு விதியாகாது:)..அதனால் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்துவது முட்டாள்தனம்தான்.கோயில்கள் புரப்ஷனலான நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்.அது நடந்தால் கோயில்கள் புதுப்பொலிவு பெறும்.

"இறை நம்பிக்கைக்கும் மனிதநேயத்துக்கும் தொடர்பில்லை" என்பது பொலிட்டிகலி கரெக்ட் ஸ்டேட்மெண்ட்:)...நாத்திகர்களை பற்றி நான் எதுவும் பேசவில்லை என்ற டிஸ்கியை போட்டுவிட்டு பைபிளில் இருந்து ஒரு quote போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறேன்.

My brothers, what use is it for a man to say he has faith when he does nothing to show it? Can that faith save him? Suppose a brother or a sister is in rags with not enough food for the day, and one of you says, 'Good luck to you, keep yourselves warm, and have plenty to eat', but does nothing to supply their bodily needs, what is the good of that? So with faith; if it does not lead to action, it is in itself a lifeless thing." (Bible; James 2:14-17).

உங்கள் மற்ற கருத்துக்கள் என் நிலையிலிருந்து வேறுபடவில்லை.அதனால் பதிவுக்கு ஒரு + குத்திவிடுகிறேன்:-)

enRenRum-anbudan.BALA said...

செல்வன்,
மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

அரசுத் துறைகளின் inefficiency தெரிஞ்சது தான் என்றாலும், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களும் பெரும்பாலும் வணிகத்தை முன் வைத்தே இயங்குகின்றன ! சமீபத்தில் கட்டப்பட்ட வேலூர் "தங்கக் கோயிலுக்கு" போய் வந்த ஒருவர், அங்கு நடக்கும் கூத்தைப் பற்றிக் கூறினார் :(

//"இறை நம்பிக்கைக்கும் மனிதநேயத்துக்கும் தொடர்பில்லை" என்பது பொலிட்டிகலி கரெக்ட் ஸ்டேட்மெண்ட்:)...
//
ஜெயசூர்யா மாதிரி பாயிண்ட் பவுண்டரி மேல ஸிக்ஸர் அடிக்கறீங்க, நடக்கட்டும் :)

//உங்கள் மற்ற கருத்துக்கள் என் நிலையிலிருந்து வேறுபடவில்லை.அதனால் பதிவுக்கு ஒரு + குத்திவிடுகிறேன்:-)
//
Is it "Great Men think alike" OR "Fools Seldom differ" ???? ;-)

enRenRum-anbudan.BALA said...

கோவி.கண்ணன்,
வருகைக்கும் கருத்துகும் நன்றி,

செல்வன் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார் ;-)

Unknown said...

டென்ஷன் ஆகலை பாலா...ஒருத்தனுக்கு பக்தி இருப்பது உண்மை என்றால் அவன் அடுத்த மனிதனுக்கு உதவவேண்டும்.அப்படி உதவலைன்னா அவன் ஆசாடபூதின்னு அர்த்தம்.

உங்களை எடுத்துகிட்டா நீங்க ஆழ்வார் பாசுரத்தை அழகா எழுதறீங்க.ஏழை மாணவ மாணவிக்கும் உதவறீங்க. இதை உண்மையான பக்தியின் வெளிப்பாடா என்னால் மனபூர்வமா கருத முடியும். ஆன்மிகவாதிகள் பலரும் ஊருணி,குளம்,குட்டை,கல்வி என தானதருமம் செய்ய அவர்கள் பக்தி துணை நின்றதும் கடவுள் பெயரால் அவர்கள் நல்லது செய்ததும் நம் எல்லோருக்கும் தெரியும்.எவனுக்கும் ஒண்ணுமே செய்யாமல் தானுண்டு தன் பிழைப்புண்டு என வாழ்பவன் நிஜமான பக்தன் கிடையாது.

(நாத்திகர்களை பற்றி பேசலை என்ற டிஸ்கியை மீண்டும் இடுகிறேன்.உண்மையான பக்தனை பற்றித்தான் பேச்சு)

நான் கோயில்களை தனியார் மயமாக்க சொல்லவில்லை.புரபஷனலான நிர்வாகத்திடம் தான் கொடுக்க சொன்னேன்.பல சேவை அமைப்புகள் அதுபோல் வெற்றிகரமாக இயங்குகின்றன..கோயிலை ஒரு துறையாக வைத்து அதுக்கு ஒரு மந்திரியை போட்டால் அது மற்ற அரசு துறைகளை போல் உருப்படாமல் போய்விடும்.

//Is it "Great Men think alike" OR "Fools Seldom differ" ???? ;-)//

நான் கிரேட் மேன் கிடையாது. நான் முட்டாளா இல்லையான்னு மத்தவங்க தான் சொல்லணும். நான் சொல்ல முடியாது:-)

நீங்கள் பதிவுகளை மிகவும் சிறப்பாக எழுதுகிறீர்கள். நல்ல வேலையில் இருக்கிறீர்கள். முட்டாள்களுக்கு இதெல்லாம் கைவராது.அதனால் நீங்கள் கண்டிப்பாக முட்டாள் இல்லை.ஏழைகளுக்கு உதவி செய்யும் மனோபாவம் உங்களுக்கு இருக்கிறது.அதனால் நீங்கள் கண்டிப்பாக கிரேட்மேன் தான்.இதில் எந்த சந்தேகமும் இல்லை:)

K.R.அதியமான் said...

செல்வன்,

கோயில் நிற்வாகங்கள் அந்த காலத்தில் லோக்கல் 'பெரிய' மனிதர்களின் கட்டுப்படில்தான் இருந்தன. அல்லது அந்த பகுதியை சேர்ந்த மடத்தின் நிர்வாகத்தில்தான் இருந்தன. அப்போது ந‌ம‌து நாட்டில் ஜனனாயக சோசிய்லிச கொள்கைகள் மலராத காலம். அதானால், மக்களிடம் அடிப்படை நேர்மை இருந்தது. நிர்வாகிகளும் மிக நேர்மையாகவும் பொருப்புணர்வுடனும் செயலாற்றினர். (பெரியார் கூட ஒரு கோவில் தர்மகர்தாவாக மிக நேர்மையாக்வும், திறமையாகவும் பணியாற்றினார்).

அடிப்படை நேர்மை மிக மிக குறைவான இந்த காலத்தில், அரசு கட்டுப்பட்டில் இருந்து லோக்கல் தர்மகர்த்தா அல்லது லோக்கல் ட்ர்ஸ்ட்களிடம் நிர்வாகம் மாற்றப்பட்டால், இப்போது இருப்பதை விட மோசமான நிலைமை உருவாகும் என்பதே யதார்த்தம்.
பல கிருஸ்துவ திருச்சபைகளிலும், இஸ்லாமிய வாக்கஃப் போர்ட்களிலும் ஊழ்ல் மற்றும் பல‌ நிர்வாக கோளாருகள் தலைவிரித்து ஆடுகின்றன என்பாதே சோகமான உண்மை.

In these cynical and corrupt times, it is not practical to hand over the management of temples to private trusts or groups which will be usually taken over (thru covert overt means) by mafia like local dons or crooks. Like in the current scenerio of local panchayaths and co-operative societies everywhere. It will be virtually impossible to check or control or enforce the rule of law and ethics. See what happened to kachi mutt and thiruvaadutharai madam in recent decades. or in many trusts and service charities everywhere..

Hence, unless the ethics and morals of Indians improve as whole to pre-independence levels, it will be counter-productive to hand over the management to any 'elected' bodies or organisations.

anbudan
Athiyaman

enRenRum-anbudan.BALA said...

Selvan,

Thanks for the response ! To be honest, I do not deserve all that appreciation, We should thank our blogger friends who come forward spontaneously to help when I put in an appeal !!! Hats off to them ! I am just a co-ordinator in these social activities.


Athiyaman,
Thanks for your comments ! What you say makes a lot of sense :) We all know about an autonomous body called BCCI ;-)

Unknown said...

Very good post ....

enRenRum-anbudan.BALA said...

Thanks, Sundararajan !

said...

http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_21.html

வவ்வால் said...

பாலா,

நன்றாக சொல்லியுள்ளீர்கள், ஆனால் இதுவும் கண்ணபிரானின் பதிவின் ஒரு நீட்சியாக ஒலிக்கிறது பெரும்பாலும். இன்னும் கொஞ்சம் முற்றிலும் மாறுப்பட்ட வழிகளையும் முயற்சித்து இருக்கலாம். நான் தீர்வாக ஒரே அடியாக தூக்கிட சொல்லிட்டேன் :-))
---------------------------
செல்வன்,
//அரசு நிர்வாகத்தை பற்றி முதலில் பேசவேண்டும்.மதசார்பற்ற அரசுக்கு கோயில் நிர்வாகத்தில் எந்த ஜோலியும் கிடையாது என்பது ஒருபுறம்.அரசு இயந்திரம் வழக்கமாக திறமையற்ற ஒன்று என்பது மறுபுறம்.//

சில சமயம் அறிவுக்கண் மூடிக்கொள்கிறது போலும்.

மதச்சார்பற்ற அரசுக்கு கோவிலில் என்ன வேலை , லாஜிக்கா இருக்காப்போல இருந்தாலும் இல்லை, அரசின் பரிபாலனத்தின் கீழ் இருக்கும் மக்களின் ஒரு சாரருக்கு கோவிலில் உரிய சமூக மரியாதை மறுக்கப்படும் போது அரசு தலையிட்ட வேண்டி இருக்கிறது.எனவே மதச்சார்பற்ற அரசாக இருந்தாலும் கோவிலை மக்கள் உரிமைக்காக வைத்திருக்கிறது.

வைக்கத்தில் பெரியார் ஆலய பிரவேசம் ஏன் நடத்தினார் சும்மா போய் வருவோம் என்றா, ஏன் கேராள வரைக்கும் போகனும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட ஆலய பிரவேசம் நடத்தி தான் தாழ்த்தப்பட்டோர் செல்லும் உரிமையை பெற்றனர், ஒரு முறை போய் விட்டால் போதுமா தொடர்ந்து செல்லும் உரிமை பெற அரசு தானே ஆவன செய்ய வேண்டும், அரசால் கோவில் அறங்காவலரை எப்போதும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது, எனவே அரசே கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது.

கோவில் என்பது வியாபாரம் அல்ல, 1 ரூபாய் போட்டால் 2 ரூபாய் எடுக்க, எனவே இதில் முதலில் பார்க்க வேண்டியது மனித நேயம் , பின்னரே நிர்வாக திறமையால் மேம்படுத்தல். சும்ம பள பளனு பளிங்கு கல் போட்டு சுத்தமாக வைத்துக்கொண்டு அங்கே ஒரு சமூகத்தினர் வரக்கூடாது என்று சொல்லும் நிலை அல்ல.

அனைவருக்கும் சமூக உரிமை கோவிலில் கிடைப்பதை உறுதி செய்ய அரசால் மட்டுமே முடியும்.

ராகவேந்திரரின் மந்திராலயம் போனால் சுத்தமாக வைத்திருப்பார்கள், ஆனால் உணவு அளிக்கும் போது பூணூல் பார்த்து தனி வரிசை வைப்பார்கள், இப்படிப்பட்ட தனியார் நிர்வாகம் தான் வேண்டுமா?

வவ்வால் said...

பாலா,

சொல்ல மறந்தது,

ஆத்திகர்களுக்கு தான் உதவும் மனப்பான்மை அதிகமாம்,
செல்வன் சொன்னதில், இதை விட காமெடி வேறு இல்லை.

கந்து வட்டிக்கு விடுபவன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன் எல்லாம் போய் திருப்பதி உண்டியலில் காசைக்கொட்டுவார்கள், ஆனால் கடன் வாங்கியவன் மீதோ அடுத்தவர் மீதோ இரக்கமே காட்ட மாட்டார்கள்.

எத்தனையோ கோவில்கள் பராமரிக்க முடியவில்லை என வருத்தப்படும் பக்திமான்கள், எத்தனையோ கிராமப்புற பள்ளிகள் போதிய வசதி இன்றி கூரைக்கொட்டகையில் மாட்டுத்தொழுவம் போல நடக்கிறதே என்று ஒரு நாளும் வருத்தப்பட்டது இல்லை.

கேட்டால் அரசின் கடமை அது எனத்தட்டிக்கழிப்பார்கள்.

கோவில் உண்டியலிலோ, இல்லை கோவிலுக்கு டுயூப் லைட் வாங்கிக்கொடுத்து விட்டு அதன் மீது பெரிதாக பெயர் போட்டுக்கொள்வதிலோ , பெருமாள் கோவில் என்று பெரிய போர்டு செய்துக்கொடுத்து விட்டு பெருமாளுக்கே உபயம் கோவிந்தசாமி என்று பெயர் போட்டுக்கொள்வார்கள், இவற்றில் காட்டும் அக்கரையை சமூகத்தின் மீது காட்டாதவர்கள் தான் பக்திமான்கள்! :-))

Unknown said...

// இறை நம்பிக்கைக்கும், மனித நேயத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை !!! //

பாலா,
இதுதான் உண்மை.

ஆன்மீகம் என்பது கிரிக்கெட்/சினிமா/பல்லாங்குழி போன்று ஒரு பொழுது போக்கு அவ்வளவே. மனித நேயம் மட்டும் அல்ல எந்த தனிப்பட்ட ஒழுக்கங்களையும் ஆன்மீகம் வளர்ப்பது இல்லை. ஆன்மீகம் ஒரு துறை அவ்வளவே

thiru said...

Interesting proceedings.

The title given by Mr Kannabiraan, 'Dont pour offerings in Hundi in temples' is indeed sensational as pointed out by Mr Bala. But, the contents of his posting are laudable and thought-provoking.

Why to resort to such sensational titles, then? Maybe, he wants to hook more visitors! I was one of the such readers who was hooked and visited his blog; and I found he is a great blogger with much substantial and thought-provoking ideas to convey to lesser mortals like us.

Money poured in the name of God is not confined only to Hindu temples. It is done anywhere. Even small children, attending Sunday classes (Christian moral classes), are asked to give whatever they can, under the pretext such money will go to help the needy. Thus, the noble notion to give charity and emphatise with the sufferings of others, gets inculcated in their tender minds early on.

It is therefore for charity, or helping in charitable acts, that people offer in the name of God. Please note: they are not forced. In Tirupathi, the tradition of such act is linked to its puranam viz. the Lord there is so poor that he needs money to celebrate his marriage. It is, however, a religious symbol, in addition, to our act of charity.

When people are not forced, there cant be a question of 'to give or not to give'.

If the temple gets renovated using the offerings of the people, still that is a charity. Isn't the temple a place of congregation of people; and, as Mr Bala said, shouldn't they be given basic amenities like good toilet, resting hall, etc. when they have to spend more than a day there, as in Tirupathi?

Here, I refer to Vaivaal’s asking us to give for other social purposes only. That is good. But that act and this act need not be inter-linked. If someone gives to temples only and not at all to any other social philanthropic act like maintaining a school for slum children, it is an individual lapse. If more people do the same, it is also a moral lapse on their parts. No temple authority says you should give only to temples. Never. My point is: both acts are separate. One does not diminish the other.

A lot can be written in the matter. But let me stop here.

Next, whether it is compulsory to be a believer in order to be a good man or not. As Mr Bala sat on the fence over this question, so all of us can sit. Still, I feel, the basic point of Belief is tabbing, to the optimum, the spiritual core of man - which is completely antithetical to his material core. The material core is hugely responsible for his misdeeds in life. The spiritual helps him in empathetic relationship with fellow humans.

Belief in God belongs to metaphysics. I mean, you can’t catch it in hand and measure it. It is based on imagination of man - again a metaphysical thing!

O WORLD invisible, we view thee,
O world intangible, we touch thee,
O world unknowable, we know thee,
Inapprehensible, we clutch thee!

This is Francis Thomson, the English poet.

An atheist denies such metaphysics. He denies the existence and validity of imagination, which is what a religion demands from man..

If the non-believer is a good person, a humanitarian, a philanthropist, then, the difference between him and the believer is nil. He, too, becomes spiritual. Though he may not owe allegiance to any belief system and completely denies God, his actions ipso facto become spiritual.

Then, why to say – but somewhat correctly - the belief in God makes man God. Because, the belief systems by great thinkers like Hindu Rishis, Jesus Christ, Buddha, Jain etc., are built or structured elaborately with minute care with the sole motive to tab the spiritual core of man to the optimum. Such pre-ordained plan or motive does not exist in the non-belief system. Non-belief system is itself a misnomer; for, there is no System as such there. In other words, we could say, the non-believer is good, on his own; and the believer ‘becomes’ good, with external props, created for him or her, thorugh religion, that has made his/her spirituality come alive in action. If spirituality is not in action – either personally or socially, that person is not a believer in real sense. He is a hypocrite.

Something more, but different. A poster by name malainaadan said, Nav Thirupathis are near Kumbakonam. He was responded by Mr Bala without contradiction. But, according to my knowledge, the Nine Temples of Thirumaal, called Nava Thirupathis, are on the banks of Tambrabaruni, all in and around the small riparian town called Srivaikuntam, a 45 minutes drive from Tuticorin. They are being maintained neat and clean. Perhaps, due to some corporate help, as said here.

Please go to the Tuticorin District official website of TN government to know more about them.

Unknown said...

// If the non-believer is a good person, a humanitarian, a philanthropist, then, the difference between him and the believer is nil. He, too, becomes spiritual.//

இது பெரிய மோசடி கலந்த காமெடி :-)

Spiritual (god-believers) மக்கள் எல்லாம் default ஆக good person, humanitarian and philanthropis என்று சொல்லாமல் சொல்லி ...

Non-believer -ம் அப்படி இருந்தால் he, too, becomes spiritual என்று சொல்கிறீரா?

99 % மேலாக spiritual (god-believers) மக்கள் உள்ள நாடு ஏன் இப்படி கேடு கெட்டு இருகிறது thiru?

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

//ஆனால் இதுவும் கண்ணபிரானின் பதிவின் ஒரு நீட்சியாக ஒலிக்கிறது பெரும்பாலும்
//
இப்படி "மொட்டையா" ஒரு போடு போட்டா பிச்சுப்புடுவேன் பிச்சி ;-)) எந்த கருத்து problematic என்று கூறவும்!

//மதச்சார்பற்ற அரசுக்கு கோவிலில் என்ன வேலை , லாஜிக்கா இருக்காப்போல இருந்தாலும் இல்லை, அரசின் பரிபாலனத்தின் கீழ் இருக்கும் மக்களின் ஒரு சாரருக்கு கோவிலில் உரிய சமூக மரியாதை மறுக்கப்படும் போது அரசு தலையிட்ட வேண்டி இருக்கிறது.எனவே மதச்சார்பற்ற அரசாக இருந்தாலும் கோவிலை மக்கள் உரிமைக்காக வைத்திருக்கிறது.
//
//எத்தனையோ கோவில்கள் பராமரிக்க முடியவில்லை என வருத்தப்படும் பக்திமான்கள், எத்தனையோ கிராமப்புற பள்ளிகள் போதிய வசதி இன்றி கூரைக்கொட்டகையில் மாட்டுத்தொழுவம் போல நடக்கிறதே என்று ஒரு நாளும் வருத்தப்பட்டது இல்லை.
//

ஒத்துக்கறேன் !

செல்வன் வந்து பதில் தருவார் என்று நினைக்கிறேன்.

கல்வெட்டு,
//
ஆன்மீகம் என்பது கிரிக்கெட்/சினிமா/பல்லாங்குழி போன்று ஒரு பொழுது போக்கு அவ்வளவே. மனித நேயம் மட்டும் அல்ல எந்த தனிப்பட்ட ஒழுக்கங்களையும் ஆன்மீகம் வளர்ப்பது இல்லை. ஆன்மீகம் ஒரு துறை அவ்வளவே
//
இது சற்று severe-ஆன கருத்து என்பது என் எண்ணம். ஆன்மீகம் ஓரளவேனும் மனிதனை பண்படுத்தும் என்பது ஆத்திகவாதியான எனது தாழ்மையான கருத்து ! எல்லாருமே சாமி ஏதாவது கொடுப்பார் என்று கோவிலுக்குச் செல்வதில்லை !!!!

thiru,
Thanks for your detailed views and I agree to some of your observations, though I disagree with your "Bala sat on the fence" :)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

*******************
// If the non-believer is a good person, a humanitarian, a philanthropist, then, the difference between him and the believer is nil. He, too, becomes spiritual.//

இது பெரிய மோசடி கலந்த காமெடி :-)
*******************
:))))))))

jollupandi said...

/// If the non-believer is a good person, a humanitarian, a philanthropist, then, the difference between him and the believer is nil. He, too, becomes spiritual.//

Thiru, can u say the vice versa version of this?
if a believer is not a good person , a non humanitarian and indulge in non ethical activities.... then?

will u say the vice versa is not possible?

----
when you compare the humanitarian act of two individuals , please dont get the spritual aspects inside it.. these are two differnet things. comparing apples to oranges.

i should use the term co-relate than compare

ஓகை said...

நவதிருப்பதிகள் குடந்தை அருகில் இல்லை. அவை தென்கோடி தமிழகத்தில் உள்ளன. நண்பர் திரு குறிப்பிட்டது சரியே.

////"இறை நம்பிக்கைக்கும் மனிதநேயத்துக்கும் தொடர்பில்லை"////

இப்போதுள்ள நாத்திகர்களின் எண்ணிக்கையையும் ஆத்திகர்களின் எண்ணிக்கையையும் மாற்றிப் போட்டால் வரும் கற்பனை உலகிலும் நீங்கள் சொல்லியது சரியா பாலா?

பெரும்பாலான நாத்திகர்களையும் சிறுபான்மை ஆத்திகர்களையும் கொண்ட கற்பனை உலகில் மனிதநேயம் இப்போதிருக்கும் அளவிலேயே இருக்குமா?

வவ்வால் said...

எ.எ.பாலா,

//இப்படி "மொட்டையா" ஒரு போடு போட்டா பிச்சுப்புடுவேன் பிச்சி ;-)) எந்த கருத்து problematic என்று கூறவும்!//

எதுவும் பிரச்சினைக்குரியது அல்ல , ஆனால் உங்கள் தீர்வாக எதுவும் சொல்லாமல் கண்ணபிரான் பதிவினை ஆய்வு செய்து அதோடு விட்டு விட்டீர்கள் என்று சொல்ல வந்தேன்.

நிர்வாக மேம்பாடுக்கு தனியார் மேலாண்மை குழு வரலாமா கூடாதா, வந்தால் என்ன ஆகும், அரசால் இதை விட சிறப்பாக செய்ய முடியாதா? ஏன் அரசே சிறப்பாக செய்ய சொல்லி மக்கள் சார்பாக கேட்கக்கூடாது.

அரசு நடத்தும் நியாய விலைக்கடைகளில் கூடத்தான் நிர்வாக சீர்க்கேடு இருக்கு, அதை ஏற்று நடத்த தனியார்கள் வர சொல்லலாமே :-))
2 ரூபாய்க்கு அரிசி தருவார்களா?

கோவிலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களை விட ரேஷன் கடை அரிசியை நம்பி இருப்பவர்கள் அதிகம்.

thiru said...

'A fraud humorously said' is how Mr Balloon alias Mama describes my statement.

Spirituality is a common denominator. This is the point to be understood in my message. None can have the exclusive right over it. All of us are inherently born, more or less, with it. Recently, I came across a psychologist saying that, it is important for a wholesome happy life to activate, in addition to IQ and EQ (Emotional Quotient), the SQ(Spiritual Quotient) also. Studies made by some American psychologists have evidenced that faith (belief in God) helps people cope with stresses or tragedies in life; thus, saving them from cardiac and other health problems. The faithful are at ease with their own selves always. Blissful state.

The SQ is fallaciously believed to belong only to the believers in God. This ignorance is often found among the believers. They are proud and vain of being the sole possessors of SQ. It does not. As I already noted in my posting, the SQ is adroitly, but without selfish motives, kindled into a light in every man by great religious men, For this purpose, they founded their religions. (Don’t include here those who exploit it wearing saffron robes, white chalice, etc. They are conmen, like quacks exploiting medical profession.)

The SQ is activated positively in believers with the props of religions. If a religion activates it negatively, that is an exception. The error is either with the particular religion or malicious misinterpretation of it by a section of its followers. We are talking here generally. Not particularly. For this activation process, the founders have devised intricate methods: rituals, ceremonies, rules and regulation: a way of life to follow – but all of them are for commoners. The extraordinary among us may ignore all and still achieve the goal of religion, e.g Tamil Sitthars. The rules etc. are enjoined upon the believers because they have to lead material lives also in this world, which should not get vitiated and become an obstacle in the growth and progress of SQ of the believers.

All this external support for nourishment and growth of SQ is denied to non-believers. Or, they deny it themselves. Many among them get the aforesaid benefits of spirituality, or attain the goal of spirituality, blissful state, on their own, and lead good and divine lives, by devising their own way of living, negating at the same time strongly the existence of God and rejecting all religions. If a non-believer, say for e.g. Periyaar, took the common weal of society as his aim by attacking and making people realize the exploitation in the name of God, he was a spiritual person and, not without reason, Rajaji called him an Azhawaar. ‘Common Weal of Society’ is a greater goal that comes under what we call spirituality.

In sum, I would say, God is realized, without taking any conscious effort, or completely discarding any thought on such realization or existence of God etc., by the atheist also. He is godly if his actions are not selfish and have their goal the greatest good for the greatest number of people. Social and personal ethics determine the level of spirituality. No true religious men would say, the atheist is out; and the theist is in – based just on the matter of faith namely belief in God. Non-belief in God is nothing but a belief in God; however much an atheist is adamant to negate me. He is a blessed human no doubt!

ஓகை said...

என் கேள்விக்கென்ன பதில்?

enRenRum-anbudan.BALA said...

அன்பின் ஓகை,

தப்பிக்கப் பார்த்தால் விட மாட்டீர்கள் போல உள்ளதே :) கற்பனையான ஒரு சூழலில், நிலைமை என்னவாக இருக்கும் என்று கேட்டால், பதில் சட்டென்று கூற இயலவில்லை.

எனினும், காருண்யம் மற்றும் மனிதநேயம் ஆகிய குணங்கள் தழைக்க இறை நம்பிக்கையை முக்கியக் காரணியாக என்னால் ஏற்க முடியவில்லை. ஆன்மமீக ஆசான்களே, கடவுளைத் தொழுவதைக் காட்டிலும், நலிந்தோர்க்கு உதவுதலையே சிறந்த பண்பாகப் பார்த்தனர். ஆன்மீகம் / இறை நம்பிக்கை ஆகியவற்றின் மெய் நோக்கம் வேறு என்பது என் புரிதல்.

எ.அ.பாலா

ஓகை said...

பிழைத்துப் போங்கள்!

Geetha Sambasivam said...

//கும்பகோணத்திற்கு கிட்டவாக என்று நினைக்கின்றேன். "நவதிருப்பதி" எனும் ஒன்பது வைனவதிருத்தலங்களுக்குச் சென்றபோது, தமிழகத்து ஆலயங்களில் எங்குமிலாத தூய்மை, அமைதி, நேரம்கட்டுப்பாடு, தேவையற்ற பிச்சல் புடுங்கல் எதுவுமில்லாதிருக்கக் கண்டேன்//

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன "நவதிருப்பதிகள்" அங்கே கோவிலில் மட்டுமில்லாமல் ஊழியர்களின் வாழ்வும் அதே நிறுவனத்தால் செம்மையாய்க் கவனிக்கப் படுவதால் அர்ச்சகர்களோ, ஊழியர்களோ மிக மிக அருமையாகக் கோவில் பணி செய்ய முடிகிறது. குடும்பத்தை மறந்து விட்டு இறைப்பணியில் ஆழ்வது என்பது ஞானிகளால் தான் முடியும். :) மற்றவைகளைப் படித்தேன்.

Geetha Sambasivam said...

//ஆன்மீகம் என்பது கிரிக்கெட்/சினிமா/பல்லாங்குழி போன்று ஒரு பொழுது போக்கு அவ்வளவே. மனித நேயம் மட்டும் அல்ல எந்த தனிப்பட்ட ஒழுக்கங்களையும் ஆன்மீகம் வளர்ப்பது இல்லை. ஆன்மீகம் ஒரு துறை அவ்வளவே//

பலூன் மாமா சொல்லி இருக்கும் ஆன்மீகத்தின் அர்த்தமே வேறே என்பதாய்ப் புரிந்து கொண்டு ஒரு ஸ்மைலியைப் போட்டுடறேன்! :)))))))
திரு எழுதி இருப்பதை இன்னும் 2 முறை படிக்கணும், வர்ட்டா?

Geetha Sambasivam said...

//Non-belief in God is nothing but a belief in God; however much an atheist is adamant to negate me. He is a blessed human no doubt!//

ரிபீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடே!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails